×

தரக்குறைவான பேச்சு ராதாரவியை விசாரிக்க வேண்டும்: நயன்தாரா பரபரப்பு அறிக்கை

சென்னை: நடிகை நயன்தாரா நேற்று வெளியிட்ட அறிக்கை: ராதாரவியின் பெண் வெறுப்பு பேச்சை கண்டித்து உடனடியாக அவர் மீது நடவடிக்கை  எடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். பாலின ரீதியான கருத்துகளை  சொல்லி பெண்களின் நிலையை தரம் தாழ்த்துவதன் மூலம், இத்தகைய பாதிக்கப்பட்ட  ஆண்கள், ஆண்மையை உணர்கிறார்கள். இப்படியான ஆண்மை மிகுந்தவர்களின் வீட்டில் இருக்கும் பெண்களுக்காகவும் நான்  பரிதாபப்படுகிறேன். மூத்த நடிகராகவும், இவ்வளவு  வேலை அனுபவமும் கொண்ட ராதாரவி, இளம் தலைமுறைக்கு ஒரு  முன்மாதிரியாக திகழ்ந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, பெண் வெறுப்பில்  ஒரு முன்மாதிரியாக இருப்பதையே அவர் விரும்பியிருக்கிறார். ராதாரவி போன்ற நடிகர்கள், வாய்ப்புகள் இல்லாமல் துறைக்கு பொருத்தமின்றி போகும்போது புகழ் வெளிச்சத்துக்காக இதுபோல் தரக்குறைவாக நடந்துகொள்கின்றனர். இதில் அதிர்ச்சியான விஷயம், அவரது ஆணாதிக்க பேச்சுகளுக்கு  கைதட்டல்களும், சிரிப்பு சத்தமும் ரசிகர்கள் பக்கத்திலிருந்து தவறாமல்  வருவதுதான்.

இதுபோன்ற பாலியல் வேறுபாட்டு கருத்துகளை ரசிகர்கள் ஆதரிக்கும் வரை,  பெண் வெறுப்பு, பெண்களை இழிவுபடுத்தும் நகைச்சுவை ஆகியவற்றை  ராதாரவி  போன்றவர்கள் தொடர்ந்து பேசுவார்கள். எனக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்படி கடவுள் என்னிடம் கருணை காட்டியுள்ளார், தமிழகத்தின் அன்பார்ந்த  சினிமா ரசிகர்கள் எனது நல்ல நடிப்புக்காக வெகுமதி அளித்துள்ளார்கள்.  சீதா, பேய், பெண் தெய்வம், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை கொண்ட  கதாபாத்திரங்களை நான் தொடர்ந்து ஏற்று நடிப்பேன். கடைசியாக,  நடிகர் சங்கத்துக்கு எனது பணிவான கேள்வி. உச்ச நீதிமன்றம் சொன்னதைப் போல  ஒரு புகார் குழுவை அமைப்பீர்களா, விசாகா குழு வழிகாட்டுதல்களின்படி  துறைக்குள் விசாரணையை தொடங்குவீர்களா? இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nayantara , RADHARAVI, Nayantara
× RELATED அஜித்துக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி?